Breaking News

தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு உளுந்தூர்பேட்டையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்,


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட உத்தரவிட்டார்.


இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பரணி பாலாஜி அவர்களின் தலைமையிலான உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொண்டர்கள் ஒன்றிணைந்து கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் அவர்களின் முன்னிலையில் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதிகளில் பட்டாசு வெடித்தும்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகரத் தலைவர் பாரதிராஜா, திருநாவலூர் ஒன்றிய தலைவர் சக்திவேல், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜய் செல்வா, உளுந்தூர்பேட்டை நகர இளைஞரணி தலைவர் மெர்சல் கார்த்திக், உளுந்தூர்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் விஜய், திருநாவலூர் ஒன்றிய பொருளாளர் சுபாஷ், உளுந்தூர்பேட்டை ஒன்றிய இளைஞரணி பொருளாளர் அஜய் குமார், திருநாவலூர் ஒன்றிய துணைத் தலைவர் பெரியசாமி உட்பட உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!