திண்டிவனத்தில் அரசு பேருந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள்.
திண்டிவனத்தில் இருந்து வெளிமேடு பேட்டை நோக்கிச் சென்ற அரசு பேருந்தில், பள்ளி மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த காட்சி வெளியாகி உள்ளது.
திண்டிவனம் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து திண்டிவனத்தில் உள்ள உள்ள அரசுப் பள்ளியில் படித்துவரும் மாணவ, மாணவிகள் பள்ளி முடிந்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்ப தினமும் அவதிப்பட்டுவருவதாகவும், திண்டிவனம் செஞ்சி ரோடு பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகள் நிற்பதைக் கண்டாலே பெரும்பாலான அரசுப் பேருந்துகள் நிற்காமல் செல்வதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments