Breaking News

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.


குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிக்கு இன்று (13.09.2024) அடிக்கல் நாட்டியதோடு, பல்வேறு முடிவுற்ற பணிகளை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரங்கமங்கலம் ஊராட்சி மற்றும் கொத்தவாச்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 39.95 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும், அரங்கமங்கலம் ஊராட்சி, ராசாக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு PMKKY திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் வட்டங்களுக்குட்பட்ட பரவனாறு வடிநிலத்திற்கான கட்டுமானம், பராமரிப்பு மற்றும் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கென தனியாக குறிஞ்சிப்பாடியை தலைமை இடமாகக் கொண்ட ஒரு புதிய அலுவலகமாக கட்டப்பட்டுள்ள பரவனாறு வடிநில உபகோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார் மேலும் குண்டியமல்லூர் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் தொடர்ந்து பூவாணிக்குப்பம் ஊராட்சியில் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

தியாகவல்லி ஊராட்சி தம்மனாம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு PMKKY திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தையும், ஆலப்பாக்கம் ஊராட்சி கம்பளிமேடு பகுதியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலை கடை கட்டிடத்தையும், செம்மங்குப்பம் ஊராட்சி சோனஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.32.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

பச்சையாங்குப்பம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், மேலும் அவ்வூராட்சியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக ரூ.15.83 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டிடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.51 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.தொடர்ந்து காரைக்காடு ஊராட்சியில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக ரூ.9.0 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து,  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் கடலூர் சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் சமூக பொறுப்புணர்வு திட்டம் பணிகளுக்கான 2024-25 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக் கூட்டம் சிப்காட் அசோசியேஷன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகள் தங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார், மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர்  இரா.சரண்யா மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(நீ.வ.து) கு.காந்தரூபன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கஜலட்சுமி, திட்ட அலுவலர் சிப்காட் தமிழ்ச்செல்வி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!