Breaking News

திண்டிவனம் அருகே முறையாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போராடிய தாய்; குழந்தை பரிதாபமாக பலி


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (28) அவரது மனைவி கவிதா (23) இவர்களுக்கு தேவா(4),தர்மதேவன் (1.1/2) இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களாக சிறிய மகனான தர்ம தேவனுக்கு மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 

குழந்தையின் தந்தை ஆனந்தனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது இதனால் கடந்த பத்தாம் தேதி கவிதா மட்டும் தனியாக குழந்தையை அழைத்து கொண்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் வாங்கிச் சென்றுள்ளனர்.இதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக குழந்தைக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

உதவிக்கு யாரும் இல்லாததால் மொளசூரிலிருந்து கவிதா குழந்தையை அழைத்துக் கொண்டு கட்டளையில் உள்ள தாய் வீடான ஜெயலட்சுமி (62) வீட்டிற்கு சென்றுள்ளார்  அங்கு ஜெயலட்சுமி இல்லாததால் அவரை தொடர்பு கொண்ட போது ஒரத்தி கிராமத்தில் உள்ள தனது சிரிய மகளான அம்மு (35) என்பவரின் வீட்டிற்கு சென்று இருப்பதாகவும் உடனடியாக வருவதாகும் தெரிவித்து நேரில் வந்துள்ளனர். 

மூன்று பேரும் சேர்ந்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் நேற்று காலை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அப்பொழுது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைத்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து கவிதா மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்தது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் குழந்தையை கொடுத்து விடுமாறும் நாங்கள் கொண்டு செல்கிறோம் என்று கூறியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பிரம்மதேசம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிவக்குமார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

No comments

Copying is disabled on this page!