ராக்கெட் ஏவுதளத்தில் நேரடியாக பார்த்து வந்த சீர்காழி மாணவர்களுக்கு பாராட்டு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, மற்றும் சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியை சார்ந்த மாணவ, மாணவிகள் ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள இஸ்ரோவின் (ISRO) சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் சீரிப் பாய்ந்த எஸ். எஸ்.எல். வி. டி 3 ஏவுகணையை கல்வி சுற்றலாவாக சென்று நேரில் பார்த்து கண்டுகளித்தனர்.
இந்த SSLV D3 ராக்கெட் ஆனது 175.5 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக ஏவப்பட்டு குறைந்த புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. இது ஓராண்டுக்கு மட்டுமே செயல்படும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்வினை நேரடியாக கண்டுகளிக்க
மாணவர்களை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ். முரளிதரன், என். துளசிரங்கன் ஆகியோர் தலைமையில் 200 மாணவ, மாணவிகள் கொண்ட குழு முதுகலை இயற்பியல் ஆசிரியர் ஜி. அரங்கநாதன், மற்றும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் எஸ். சேதுராமன் உட்பட 20 ஆசிரியர்கள் மாணவர் பாதுகாப்புக்காக சென்றதுடன் நிகழ்வினை நேரில் கண்ட மாணவர்களின் எதிர்கால கனவிற்கு ஊக்கமூட்டும் வகையில் அமைந்தது.
இந்த பயனுள்ள சுற்றுலாவுக்கு சென்று வந்த மாணவர்களையும், அழைத்துச் சென்று வந்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாக குழு தலைவர் ஆர். சிதம்பரநாதன், பள்ளிச் செயலர் வி. சொக்கலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அறிவுடைநம்பி, மெட்ரிக் பள்ளியின் நிர்வாக அலுவலர் எம். தங்கவேலு ஆகியோர் பாராட்டி அவர்களுக்கு சிறப்பு செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில் உதவி தலைமையாசிரியர் டி. சீனிவாசன் நன்றி கூறினார்.
No comments