Breaking News

வேலூர் மாவட்டம் மேல்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அருண் மணி என்பவர் சம்பவ இடத்திலேயே பலி.

வேலூர் மாவட்டம் மேல்பட்டி கடந்த  6 ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அருண் மணி (வயது 39) என்பவர் சம்பவ இடத்திலே பலியானதாக கூறப்படுகிறது இதுகுறித்து அங்கிருந்த ஊர் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மேல்பட்டி காவல்துறையினர் விசாரித்த போது சாமரிசி குப்பத்தில் வசிக்கும் சின்னையன் என்பவரின் மகன் அருண் மணி என்பது தெரியவந்தது.


இதுகுறித்து அங்கு உள்ளவர்களிடம் விசாரித்த போது குடியாத்தம் ஆம்பூர் இடையே உள்ள மேல்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது மாங்கா தோப்பு என்னும் இடத்தில் விவேகானந்தா பள்ளி அருகில் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது பின்னர் இது குறித்து மேல்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அருண் காந்தி விபத்து ஏற்படுத்திச் சென்ற வாகனத்தைக் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார் 


- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!