Breaking News

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

இந்நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளர் இளவரசன் கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதி வழியாக வீதியில் குப்பைகளை போட வேண்டாம் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும் கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக NCC மாணவர்கள் கலந்துகொண்டு  பதாகிகளை  கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர் பின்னர் நகராட்சி அலுவலகத்தில் உறுதி மொழியை எடுத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் மாலதி ராமலிங்கம், ஜெயலக்ஷ்மி, விஜய் பூபதி, ராஜா, மகேஸ்வரி ரமேஷ், மேற்பார்வையாளர்கள் யஸ்வந்த், சதீஷ்குமார், மகேஷ், பரமசிவம், சுசீலா,  நகராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!