அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 543 மனுக்கள் பெறப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வங்கிக்கடன் உள்ளிட்ட பல மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பெற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்தக்கூட்டத்தில் 543 மனுக்களை ஆட்சியர் ரத்தினசாமி பெற்றுக்கொண்டார்.
முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா அவர்கள் பெயரில் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வென்ற மாணவ மாணவியருக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பரிமளம், கோட்டாட்சியர் உடையார்பாளையம் ஸ்ரீஜா அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments