ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுக அண்ணா 116 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்.
சிறப்பு அழைப்பாளராக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மோகன் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு நடைபெற்று வரும் விடிய திமுக அரசின் அவலங்களை எடுத்துக் கூறி கடந்த அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்களை கட்சி தொண்டர்கள் எடுத்துக் கூறி வருகின்ற 2026 பொது தேர்தலில் மகத்தான வெற்றி பெற கடுமையாக உழைத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் நாட்றம்பள்ளி பகுதியில் தாலுகா அலுவலகம் பச்சூர், சோமநாயக்கன்பட்டி, பார்சம்பேட்டை, ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி நெடுஞ்சாலை பல்வேறு இடங்களில் சுகாதார நிலையங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது எனவும் மேலும் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை நாட்றம்பள்ளி வாணியம்பாடி ஆகிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது அதிமுக அரசுதான் மேலும் நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கான இடத்தை அதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட இடத்தினை தற்போதுள்ள திமுக அரசு நிராகரித்து வேறொரு பகுதியை தேர்வு செய்துள்ளனர்.
நகர பகுதிகளில் அமைய வேண்டிய நீதிமன்ற வளாகம் தற்போது நாட்றம்பள்ளி பகுதியை விட்டு வேறொரு பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவும் குற்றச்சாட்டினார்கள். பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகளை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சகாதேவன் வரவேற்றார்கள். மேலும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். மேலும் கொள்கை பரப்பு செயலாளர் கலைப்புனிதன் தலைமை பேச்சாளர் மூர்த்தி ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஜோலார்பேட்டை நகர செயலாளர் எஸ் பி சீனிவாசன் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளையன் நாற்றம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், சாம்ராஜ் சென்னை கலைக்குழு நவரசம் பன்னீர் கலந்து கொண்டனர்.
உடன் நாட்றம்பள்ளி பேரூர் இணை செயலாளர் நதியா ஜெயமணி நாட்றம்பள்ளி பேரூர் பொருளாளர் பிரதிநிதிகள் கிளை செயலாளர் வழக்கறிஞர் பிரிவு பல்வேறு அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாட்றம்பள்ளி அவைத்தலைவர் மகான் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.
No comments