வில்லியனூர் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி ஒரு சில வாரங்களில் செயல்பாட்டுக்கு வரும்; தங்கி பயில விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி இயங்கி வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவியர் விடுதி மூடப்பட்டது. இந்த நிலையில்,மாணவியர் விடுதியை திறந்து செயல்பாட்டுக்கு கொண்ட வர வேண்டும் என பெற்றோர்கள், மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து விடுதியை நேரில் சென்று ஆய்வு செய்த இயக்குநர் இளங்கோவன், விடுதி சிதிலமடைந்து இருப்பதை கண்டு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து விடுதியை புணரமைப்பு செய்ய உத்தரவிட்டார். தற்போது விடுதி புணரமைக்கும் பணி வேகமாக நடைப்பெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் விடுதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று விடுதி புணரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகள் மட்டுமே தங்கி இருந்த விடுதியில், தற்போது கல்லூரி மாணவிகளும் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஆதி திராவிட நலத்துறையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர்கள் பழனி, வேல்முருகன் உட்பட ஊழியர்கள் உடனிருந்தனர்.
No comments