விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்கு காரணமே திமுகவின் ரெட் ஜெயின்ட் மூவிதான். திருப்பத்தூரில் அதிமுக நடத்திய பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேச்சு!
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசுகையில் பள்ளியில் உரையாற்றிய மகாவிஷ்ணு என்பவர் என்ன தப்பா பேசினார்? ஒன்றும் தப்பா பேசவில்லை என்றார். முன்னோர்கள் பற்றி பேசியுள்ளார். இருந்து விட்டு போகட்டும் என்றவர், நீங்கள் சாமி இல்லை என்கிறீர்கள், நாங்கள் எல்லாம் சாமி இருக்கிறது என்கிறோம், ஜனநாயக நாட்டில் எல்லோரும் கருத்துக்களை சொல்வதற்கு உரிமை உண்டு. அதை விட்டுவிட்டு மகாவிஷ்ணு பாவம். ஏதோ பள்ளியில் பேசினார் என்பதற்காக என்னமோ கொலை செய்தது போல, கொள்ளை அடித்தவன் போல, அன்பின் மகேஷ் பொய்யாமொழி அப்படி பொங்குகிறார், இதை போய் பெரிசா பேசுகிறீர்கள் என்றார்.
சினிமா துறையே ஒட்டுமொத்தமாக கபிலிகரம் செய்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். இன்றைக்கு விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்கு காரணமே திமுகவின் ரெட் ஜெயின்ட் மூவிதான். மதுபான ஆலையை நடத்தக் கூடியவர்கள் ஜெகத்ரட்சகனும், டி.ஆர்.பாலுவும்தான். அவர்கள் ஆலையை மூடிவிட்டாலே தமிழகத்தில் மதுவே இருக்காது. கொரோனா காலத்தில் எடப்பாடியார் மூன்று மாத காலம் மது கடைகளை மூடியவுடன் மது அருந்தாமல் மக்கள் வாழவில்லையா என கேள்வி எழுப்பினார். விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு மாநாடு நடத்தும் பொழுது மது கொள்கையை கொண்டு வரப் போகிறார். நான் முதலமைச்சரானால் மதுவை ஒழிப்பதுதான் எனது முதல் கையெழுத்து என விஜய் கூற போகிறார் என்பதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் வழியாக நரித்தனத்தை ஸ்டாலின் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவிடம் கேட்க முடியுமா? நான்கு எம்எல்ஏ வைத்துக் கொண்டு ஆட்சியில் பங்கு கேட்ட திருமாவிற்கு அடுத்து இரண்டு சீட்டுகள் கூட திமுக கொடுக்க மாட்டார்கள் என்றார். நடைபெற்ற விழாவில் மாவட்ட அவைத் தலைவர் ஏ வி நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் கரு சிதம்பரம்,சிங்கம்புணரி ஒன்றிய சேர்மன் திவ்யா பிரபு ,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகேசன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பேரவை இணை செயலாளர் நாகராஜன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, ஒன்றிய செயலாளர்களான சிவமணி, வடிவேல், ராஜா, சிறுபான்மை பிரிவு செயலாளர்களான ராஜா முகமது, ஆசிப் மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நகர கழக கிளைக் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக நகரச் செயலாளர் இப்ராஹிம்ஷா நன்றியுரை ஆற்றினார்.
No comments