தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம்; செப்.18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் நாளை (18ஆம் தேதி) முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெறுவுள்ளதாக தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நாளை (18ஆம் தேதி) முதல் வரும் 22ஆம் தேதி வரை பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை (18ஆம் தேதி) காலை 10 மணிக்கு சாத்தான்குளம் வடக்கு ஒன்றியம், சாத்தான்குளம் பேரூராட்சி பொது உறுப்பினர்கள் கூட்டம் சாத்தான்குளம் அந்தோணி திருமண மண்டபத்தில் நடைபெறும்.
சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் கமராஜர்நகர் திமுக அலுவலகத்திலும், பகல் 11 மணிக்கு சாத்தான்குளம் மத்திய ஒன்றிய கூட்டம் முதலூர் ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடைபெறும். ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம், பேரூராட்சி கூட்டம் பேய்குளம் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெறும். கருங்குளம் தெற்கு ஒன்றிய கூட்டம் கருங்குளம் பி.எம்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறும். ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றியம், சாயர்புரம் பேரூராட்சி, பெருங்குளம் பேரூராட்சி கூட்டம் பண்டாரவிளை கனி திருமண மண்டபத்திலும், மாலை 5 மணிக்கு கருங்குளம் வடக்கு ஒன்றிய கூட்டம் வல்லநாடு சூர்யா திருமண மண்டபத்தில் நடைபெறும். கருங்குளம் கிழக்கு ஒன்றிய கூட்டம் தெய்வச்செயல்புரம் ஒன்றிய திமுக அலுவலகத்திலும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மேற்கு ஒன்றிய கூட்டம் வாகைக்குளம் ஒன்றிய திமுக அலுவலகத்திலும், இரவு 7 மணிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கூட்டம் மாப்பிள்ளையூரணி ஸ்ரீபத்திரகாளியம்மன் கலையரங்கத்திலும் நடைபெறும்.
அதேபோல் வரும் 19ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம், ஏரல் பேரூராட்சி கூட்டம் உமரிக்காடு முத்தாரம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறும். தூத்துக்குடி மத்திய ஒன்றிய கூட்டம் புதுக்கோட்டை ஆர்.சி.திருமண மண்டபத்தில் நடைபெறும். மாலை 5 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியம், பேரூராட்சி கூட்டம் புதுக்குடி ஸ்ரீரெங்கராஜ பெருமாள் திருமண மண்டபத்திலும், மாலை 5.30 மணிக்கு ஸ்பிக்நகர் பகுதி கூட்டம் பாரதிநகர் தங்கபாரதி திருமண மண்டபத்திலும், மாலை 6.30 மணிக்கு அன்னை இந்திராநகர் பகுதி கூட்டம் எட்டையாபுரம் மெயின் ரோடு லட்சுமி கார்டனிலும் நடைபெறும்.
செப்டம்பர் 20ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கூட்டம் புதியம்புத்தூர் எம்.சிகனி மஹாலிலும், மாலை 6 மணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியம் கூட்டம் தேவா திருமண மண்டத்திலும் நடைபெறும்.
அதேபோல் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்செந்தூர் ஒன்றியம், திருச்செந்தூர் நகராட்சி கூட்டம் திருச்செந்தூர் கே.டி.எம். திருமண மண்டபத்திலும், பகல் 11 மணிக்கு உடன்குடி கிழக்கு ஒன்றியம், பேரூராட்சி கூட்டம் உடன்குடி ஆர்.எஸ்.யூ.செல்வராஜ் திருமண மண்டபத்திலும், பகல் 12 மணிக்கு உடன்குடி மேற்கு ஒன்றிய கூட்டம் மெஞ்ஞானபுரம் ஜீவா ரோஸ் மஹாலிலும், மாலை 5 மணிக்கு ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றியம், நாசரேத், தென்திருப்பேரை பேரூராட்சிகள் கூட்டம் குரும்பூர் ஞானம் மஹாலிலும், மாலை 6 மணிக்கு ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியம், ஆத்தூர் பேரூராட்சி கூட்டம் வடக்கு ஆத்தூர், வீரபாகு திருமண மண்டபத்திலும் நடைபெறும். வரும் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆறுமுகநேரி, கானம் பேரூராட்சிகளின் கூட்டம் ஆறுமுகநேரி பேரூர் திமுக அலுவலகத்திலும், மாலை 6 மணிக்கு காயல்பட்டணம் நகராட்சி கூட்டம் துளிர் பள்ளி வளாகத்திலும் நடைபெறும்.
இந்த பொது உறுப்பினர் கூட்டங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துளளார்.
No comments