திண்டிவனத்தில் தழுதாளி கிராம நியாய விலைகடையில் முறைகேடுகள் நடைபெறுவதாக கிராம மக்கள் மற்றும் விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முறைகேடு செய்யப்பட்ட பொருட்களை வெளிசந்தையில் விற்பனை செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றும் கடந்த ஒருவருடமாக தழுதாளி கிராமத்தில் 720 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து நியாய விலைக்கடைகளையும் அனைத்து வேலை நாட்களிலும் திறக்கவேண்டும். மற்றும் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 வரை பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்., அனைத்து கடைகளிலும், இருப்பு மற்றும் விலைப்பட்டியல் பதாகைகளில் அன்றைய நிலையை எழுதியிருக்கவேண்டும்.. புகார்பெட்டியும், புகார் எண்ணும் எழுதியிருக்கவேண்டும். மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் பணியாளர்களை இடமாற்றம் செய்யவேண்டும். நியாய விலைக்கடையில் விநியோகம் செய்யும் பொருட்கள் மற்றும் விலை பட்டியலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து வட்டார வழங்கல் அலுவலர் உமாராணி பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
No comments