திண்டிவனத்தில் குடிபோதையில் காரில் வந்து பல பேரை இடித்துத் தள்ளி தப்பிச் செல்ல முயன்ற நான்கு பேரை போலீசார் கண் முன்னே பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்திய நிலையில் யாரும் புகார் அளிக்கத்தால் போலீசார் விடுவித்தனர்.
அப்பொழுது திண்டிவனம் போலீசார் வாகனம் தணிக்கைச் செய்ததை பார்த்த நான்கு பேரும் குடிபோதையில் போலீசாருக்கு பயந்து என்ன செய்வது தெரியாமல் போலீசாருக்கு பயந்து காரை வேகமாக ஓட்டியதில் மோட்டார் சைக்கிள் மீது மோதினார்கள். போலீசார் காரை துரத்திய போது அங்கிருந்து தப்பி நேரு வீதியில் மீண்டும் ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார்கள். மீண்டும் காரை பின்பக்கமாக இயக்கி நேரு வீதியில் மேகமாக ஓட்டி மேம்பாலம் அருகில் வாகனத்தை திருப்பி புது மசூதி வீதி ஒரு வழி பாதையில் மீண்டும் வேகமாக நான்குக்கும் மேற்பட்ட நபர்களை காரினால் இடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இவர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரை வருவதைக் கண்டவுடன் தருண், மற்றும் பிரஜீவல் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். முகமது உசேபா மற்றும் டிரைவர் கிரிதர யாதவ் ஆகிய இருவரையும் போலீசார் அங்கிருந்து காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்டபோது போலீசார் கண் முன்னே அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீண்டும் சரமாரியாக தாக்கி கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
போலீசார் பொதுமக்களிடமிருந்து அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு திண்டிவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் போலீசாரை கண்டவுடன் எப்படி செல்வது என்று தெரியாமல் பயந்து பொதுமக்களை இடித்துவிட்டு தப்ப முயன்றதாக தெரிவித்தனர்.மேலும் விபத்து குறித்து யாரும் புகார் அளிக்கத்தை தொடர்ந்து இரண்டு பேரையும் காவல் துறையினர் விடுவித்த நிலையில் ஓட்டுநர் கிரிதர யாதவ் மீது மதுபோதையில் வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்து வாகனத்தை கைப்பற்றினர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது முக்கியமான நேரு வீதியில் காரை பின்புறமாக இயக்கியதால் யாரும் விபத்தில் சிக்காமல் தப்பியதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments