உளுந்தூர்பேட்டை அருகே டாடா ஏசி வாகனங்கள் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு.
திருச்சியில் இருந்து டாட்டா ஏசி வாகனம் அட்டை தயாரிப்புக்காக பவுடர் முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்றது இந்த வாகனத்தை கோபிகிருஷ்ணன் என்பவர் ஒட்டி வந்தார் இந்த டாட்டா ஏசி வாகனம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில்சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏசி வாகனம் திருச்சி சென்னை நான்கு வழி சாலையில் இருந்த சென்டர் மீடியனைத் தாண்டி வலது புற சாலையின் எதிர் திசையில் சென்றபோது சென்னை இருந்து திருச்சி நோக்கி வந்த மற்றொரு மகேந்திரா பிக்கப் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் கோபிகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்து உள்ளார் மேலும் இருவர் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த விபத்தினால் பவுடர் மூட்டைகள் கீழே கொட்டி சிதறிசாலையின் நடுவில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனால் தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர் மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments