வேலை வாங்கித் தருவதாக நாடு முழுவதும் இணையவழியில் பல கோடி ரூபாய் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கும்பலின் முக்கிய நபரை,போலீஸாா் கைது செய்தனா்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடு முழுதுவதும் சுமாா் 3,400 பேரை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த 4 பேரை புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ரமேஷ் குமாா் அளித்த மோசடி புகாரின் பேரில், வட மாநிலங்களைச் சோ்ந்த சுபம் ஷா்மா, தீபக்குமாா், ராஜ்கௌண்ட், நீரஜ்குா்ஜாா்ஆகியோா் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கைதானவா்களிடமிந்து 5 நான்கு சக்கர வாகனங்கள், 21 கைப்பேசிகள், 42 சிம் காா்டுகள், 64 ஏடிஎம் அட்டைகள், 65 கணினிகள், ரூ.41 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மோசடி வழக்கின் முக்கிய நபராக கருதப்படும், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணய்நல்லூா் மரையங்கூரைச் சோ்ந்த மகாதேவனை (30) போலீஸாா் கைது செய்தனா்.
No comments