Breaking News

கோவை பாதிரியாருக்கு முன்ஜாமீன்.


கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரின்ஸ் கால்வின் பாதிரியாராக இருந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி ஆலயத்தில் ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரின்ஸ் கால்வின் பேசினார். அதில் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்ததாக கூறி புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தன்னுடைய பேச்சில் வருத்தம் ஏற்பட்டு இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இருந்த போதும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது வழக்கு பதிவு செய்தனர். 

இதைத்தொடர்ந்து பாதிரியார் பிரின்ஸ் கால்வின் சார்பில் முன்ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நேச. மெர்லின் மனு தாக்கல் செய்தார் .இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதிகள் பாதிரியார் பிரின்ஸ் கால்வினுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.மேலும் அந்த உத்தரவில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தன்னுடைய சமயப் பணிகளை செய்வதற்கு எந்த விட தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல பாதிரியார் பிரின்ஸ் கால்வினுக்கு நீதிபதிகள் எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!