Breaking News

தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது.


தூத்துக்குடி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொ) சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்செந்தூர் முதன்மை சாலையில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளலாம், மேலும் வாரநாட்களில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆதார் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், இந்த சிறப்பு சேவைகள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments

Copying is disabled on this page!