சோழவரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
புதியதாக ஆதார் எடுக்கவும், ஏற்கனவே ஆதார் கார்டு வைத்துள்ளவர்கள் அதில் திருத்தங்களை மேற்கொள்ளவும் மாவட்டம் முழுவதும் ஆதார் மையங்கள் மற்றும் இசேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு செல்கிற பொதுமக்கள் ஆதார் தொடர்பான தங்களது திருத்தங்களை செய்து கொள்கிறார்கள்.
இதுபோல் புதியதாகவும் ஆதார் கார்டு எடுக்க விண்ணப்பிக்கவும் செய்கிறார்கள். இந்நிலையில் இந்த ஆதார் சேவை மையங்கள் தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை செயல்படுவதில்லை.
இதுபோல் அரசு விடுமுறை நாட்களிலும் செயல்படுவதில்லை. இதற்கிடையே வேலைக்கு செல்கிறவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக அந்தந்த ஊர்களுக்கு சென்று அவ்வபோது சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் அறிவுரையின் பேரில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் மேற்பார்வையில் ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு வட்டாட்சியர் சித்ரா முன்னிலையில் சோழவரம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வருவாய்த்துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் நடந்தது.
இந்த முகாமில் புதியதாக ஆதார் எடுத்தல், திருத்தம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மாற்றம், சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சோழவரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முனி கிருஷ்ணன் வருவாய் ஆய்வாளர் ச.முனுசாமி ,கிராம நிர்வாக அலுவலர்கள் ரம்யா, பாபு , மற்றும் கிராம உதவியாளர்கள் மஞ்சுளா, குமார், ஹரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments