குத்தாலம் பகுதியில் இரவிலும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா குத்தாலம் பேரூராட்சி பகுதிகளில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
நேற்று இரவும் பல மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார் இதில் குத்தாலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோன்று பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என பேருந்து பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் கேட்டு அறிந்தார் அப்பொழுது குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கீதா மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments