தூத்துக்குடியில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு, மாவட்ட சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ சங்கம் ஆகியவை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக முன்பு தொடங்கிய இப்பேரணியை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகுமார், இந்திய மருத்துவ சங்க தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி முதன்மை வீதிகளில் வழியாக சென்று அரசு செவிலியர் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments