மலேசியாவில் நடைபெற உள்ள உலக சைவ நன்னெறி மாநாட்டில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் ரத யாத்திரை புறப்பட்டார்.
மலேசிய நாட்டில் பத்துமலை முருகன் கோயிலில் (Batucaves) சனிக்கிழமை (செப்.28) உலக சைவ நன்னெறி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த சைவ ஆதீனமான தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடக்கி வைத்து, அந்நாட்டில், மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ சரவணன் எம்பி., க்கு மக்கள் சேவைக்கான விருதினையும், மேலும் பலருக்கு ஆன்மீகம் மற்றும் இலக்கிய பணிகளை பாராட்டி விருதுகள் வழங்க உள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனகர்த்தர் சொக்கநாத பெருமான் சுவாமிகளுடன் தருமபுரம் ஆதீன திருமடத்தில் இருந்து ஞானரத யாத்திரையாக விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் ஆதீன கல்வி நிலையங்களின் சார்பில் நிர்வாகிகள் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
No comments