காரைக்காலில் நடைபெற உள்ள உலக சுற்றுலா தின விழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை.
இக்கூட்டத்தில் ஆட்சியர் "பொதுமக்களை கவரும் வண்ணம் சுற்றுலா தளங்களை தூய்மைப்படுத்துதல், கபடி போட்டி, வாலிபால் போட்டி, படகு போட்டி, மினி மாரத்தான் போட்டி, இன்னிசை கச்சேரி, புகைப்பட கண்காட்சி, ஹேப்பி ஸ்ட்ரீட் ஷோ உள்ளிட்ட போட்டிகள் நடத்த ஆலோசிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சுத்தமான குடிநீர் வழங்குதல், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த்திக் கொடுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர ஆட்சியர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள்.
துணை மாவட்ட ஆட்சியர்கள் ஜான்சன், செந்தில்நாதன், ஆட்சியரின் செயலர் பொன்பாஸ்கர், காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சிதம்பரநாதன், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, மின்துறை தலைமை பொறியாளர் அனுராதா, நகராட்சி ஆணையர் சத்யா, சுற்றுலாத்துறை அதிகாரி பரசுராமன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை தெரிவித்தார்கள்.
No comments