உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வெறி நோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி பேரூராட்சியில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வெறி நோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சியில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் பொறையார் ரோட்டரி கிளப் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது கால்நடை மருத்துவமனையில் வெறி நோயினை தடுப்பதற்காக செல்ல பிராணிகள் நாய் மற்றும் பூனைகள் கொண்டுவரப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.
பலர் ஆர்வத்துடன் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய் பூனைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர் மேலும் தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி குமரவேல் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் கால்நடை உதவி மருத்துவர் ராஜேந்திரன் சுகாதார ஆய்வாளர் பங்கேற்று வெறி நோய் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கினர்.
No comments