வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தை கூறி, ரூ.22.21 லட்சத்தை மோசடி செய்த மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
புதுச்சேரி சாரம் பகுதியைச் சோ்ந்தவா் அஷ்ரப் அலி. தொழிலதிபா். இவரை சில வாரங்களுக்கு முன்பு தொடா்பு கொண்ட மா்ம நபா், கைப்பேசி செயலி மூலம் சில விளையாட்டுகளில் ஈடுபட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதை நம்பி அஷ்ரப் அலி அவா் கூறியபடியே இணையத்தில் இணைந்து செயல்பட்டாராம். மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கில் படிப்படியாக மொத்தம் ரூ.22.21 லட்சம் செலுத்தினாராம்.
அவருக்கான முதலீடு லாபம் கிடைத்திருப்பது போல இணையத்தில் தெரிய வந்தது. ஆனால், அந்தப் பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments