ஆம்பூர் விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா.
ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் அமைந்துள்ள விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா மூவர்ண கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக நடைப்பெற்றது . சிறப்பு விருந்தினர்களாக உலக ஆனழகன் போட்டியில் வெற்றி பெற்று அர்ஜினா விருது பெற்றவர் பாஸ்கர பாண்டியன் மற்றும் ஆசிய தடகள போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஓட்டப்பந்தய வீராங்கனையான சாந்தி செளந்தராஜன் தொடங்கி வைத்தனர். பள்ளியின் செயலாளர் ஜனாப். பர்வேஷ் அகமது மற்றும் பள்ளியின் பொருளாளர் ஜனாப் இஸ்பார் அகமது மற்றும் பள்ளியின் தாளாளர் நிறுவனர் ஜனாப். மாலிக் வசிம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இவ்விழாவில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாஸ்கர பாண்டியன் மற்றும் சாந்தி செளந்தராஜன் அவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினர். இவ்விழாவில் நிறைவாக விஸ்டம் சர்வதேச பார்க் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஃ பாஹிசா தஹாசீன் நன்றி உரையாற்றி விழாவை நிறைவு செய்தனர்.
No comments