Breaking News

தூத்துக்குடி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலதிட்ட உதவிககள் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வழங்கினார்.


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுவேண்டி, தொழில் கடனுதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 420 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், 1 நபருக்கு சக்கர நாற்காலி ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து 26 கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஹபிபூர் ரஹ்மான், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உலகநாதன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!