திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் முதலாம் ஆண்டு வரவேற்பு விழா.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் தமிழழகன் தலைமை தாங்கினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் இயக்குனர் முனைவர் ஹரிஹரன் கலந்து கொண்டு பொறியியல் படிப்பின் முக்கியத்துவத்தையும், அறிவுரைகளையும் கூறி சிறப்புரையாற்றினார். முன்னதாக இவ்விழாவிற்கு முனைவர் அன்புகுமரன் வரவேற்புரையாற்றினார்.இறுதியாக முனைவர் நிர்மலா நன்றி உரையாற்றினார்.
இந்த விழாவில் துறை தலைவர்கள் முனைவர் சிவசுப்பிரமணியம், கோபிநாத்,ஜகதா டெபோரா,மில்டன் கணேஷ் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இல்லாத பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments