Breaking News

தூத்துக்குடி புத்தக திருவிழா, நெய்தல் கலைவிழா, பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்.


தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழாவினை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கனிமொழி எம்.பி., பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதி, எட்டையபுரம் சாலையில் வரும் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலைத்திருவிழா நடைபெற உள்ளது. இதனை பொதுமக்களுக்கு அறிவிக்கும் விதமாக பேருந்துகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி நடைபெற்றது. தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, பங்கேற்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி அப்பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் இளம்பவகத், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி. மதன், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், துணை மேயர் ஜெனிட்டா, அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன், துணை மேலாளர் ரமேஷ், மாநகர கிளை மேலாளர் கார்த்திக், தொமுச செயலாளர் கருப்பசாமி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!