கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழா.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளையொட்டி ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ரமேஷ் ஆகியோர் கலத்து கொண்டு வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரனார் வாரிசு செல்வி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
No comments