Breaking News

மீஞ்சூரில் விஸ்வகர்மா மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 8ஆம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்ட விஸ்வகர்மா மக்கள் முன்னேற்ற சங்க தலைவர் மேலூர் எஸ். தசரதன் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்ட விஸ்வகர்மா மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 8ஆம் ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் தேசிய தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. ஸ்ரீ மன்னாரீஸ்வரர் ஸ்ரீ பச்சையம்மனுக்கு சிறப்பு பூஜையும் விஸ்வபரபிரம்மனுக்கு யாகபூஜையும் விஸ்வகர்மா ஜெயந்தி பூஜையும் மற்றும் தேசிய தொழிலாளர் தின பூஜையும் நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து விஸ்வகர்மா படத்திற்கு மலர் அலங்காரம் செய்து பொங்கலிட்டு, பழங்கள் படையலிட்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கலந்து கொண்ட   அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காளிகாம்பாள் கோவில் அறங்காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பி.பிரகாஷ், பொருளாளர் கே.லோகிதாசன், துணைத் தலைவர் எம்.வடிவேல், துணை செயலாளர் ஜி.சந்துரு குமார், இணைச் செயலாளர் எஸ். பாபு, துணை பொருளாளர் ஆறுமுகம், சங்க காப்பாளர் வாசு, கௌரவ ஆலோசகர் பி. ஏகாம்பரம், சட்ட ஆலோசகர் கே.மூர்த்தி மீஞ்சூர் இ சேவை மையம் கருணாகரன் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட விஸ்வகர்மா மக்கள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!