காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறிய வகை விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்.
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது, போலவே சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து பூஜைகள் செய்து அருகிலுள்ள நீர்நிலைகளில் கரைத்து வழிபாடு நடத்துவது வழக்கமான ஒன்று நாளை விநாயகர் சதுர்த்தி ஒட்டி சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் காரைக்காலில் முக்கிய இடங்களில் பல்வேறு வண்ணங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வடிவங்களில் 6 இன்ச் முதல் 24 இன்ச் வரை விற்கப்படும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். விநாயகர் சிலைகள் விற்கப்படும் இடங்களுக்கு அருகே விநாயகர் சிலைக்கு ஏற்றவாறு சிறிய அளவில் குடைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த சிறிய விநாயகர் சிலைகளும் சிறிய அளவிலான குடைகளும் காண்போரை வாங்கிச் செல்ல தூண்டினாலும் குழந்தைகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.
No comments