உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 7ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விதவித மான விநாயகர் சிலைகள் அரசு கட்டுப்பாட்டு விதிகளின்படி தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூபாய் 10 ஆயிரம் வரை விநாயகர் சிலைகளை விற் பனைக்கு வைத்துள்ளனர். மயில் மேல் அமர்ந்தபடி விநாயகர் சிலை, மூஞ் சூறு விநாயகர், யானை மேல் விநாயகர் என பல் வேறு வண்ணங்களில் விதவிதமான விநாயகர் சிலைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர். விநாயகர் சிலைகள் அதிக அளவில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
இதனை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகள் வாங்குவதற் காகவந்து செல்கின்றனர்.
No comments