புதுச்சேரி ஊசுடு சட்டமன்றத் தொகுதி பத்துகண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான விழாக்களில் ஒன்று. இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி இன்று காலை முதலே உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம், ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஏகே சாய் ஜெ சரவணன்குமார் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி விநாயகர் சிலைக்கு பூஜை செய்து தீப ஆராதனை காண்பித்தார். இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், தொகுதி தலைவர் ஐய்யனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments