Breaking News

உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு சனிபகவான் ஆலய யானைக்கு நடைபெற்ற கஜ பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.


காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று ஸ்ரீசொர்ண கணபதிக்கு தங்க கவசமும், உடன் அமைந்துள்ள விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரமும் அணிவிக்கப்படுவது வழக்கம். 

இன்று  ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஸ்ரீ சொர்ண கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும் மகாதீபாராதனையும் அதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயத்திற்கு சொந்தமான பிரக்ருதி எனும் பிரணாம்பாள் (யானைக்கு) கஜ பூஜை செய்து புத்தாடை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி  நடைபெற்ற ஸ்ரீசொர்ண கணபதி அபிஷேக, ஆராதனை மற்றும் கஜ பூஜையில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீவிநாயகரையும், ஆலய யானையையும் தரிசித்து அருள்பெற்றனர்.

No comments

Copying is disabled on this page!