ஈரோடு சூரம்பட்டிவலசில் 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது.
ஈரோடு மாநகரம் சூரம்பட்டிவலசு அணைக்கட்டு எம்.எஸ்.கே நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மூல விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முதல் கட்டமாக ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மங்கல இசை, விநாயகர் வழிபாடு சங்கல்பம், புன்யாகம் பஞ்சகவ்யம் 108 சங்கு பூஜை, கலச பூஜை, வேத பாராயணம் யாக பூஜை, 1008 மோதகத்தில் யாகம், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம் அர்ச்சனை தீபாரதனை போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் பால், தயிர், நெய், அரிசி மாவு, திருமஞ்சனம் போன்ற பொருட்களை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு கொடுத்தனர்.மேலும் நடைபெற்ற யாக பூஜையில் 1008 கொழுக்கட்டைகளை கொண்டு ஹோம குண்டம் வாயிலாக யாகம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். பூஜையில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எம்.எஸ்.கே நகர் கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கினர்.
No comments