கோவில்பட்டியில் வெகு விமர்சியாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழா
கோவில்பட்டியில் வெகு விமர்சியாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் - சிறுவர் சிறுமியர்கள் விநாயகர், முருகன் வேடமிட்டும், பக்தர்கள் பால்குடம் முளைப்பாரி எடுத்து வான வேடிக்கையுடன் ஊர்வலம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுகிராமம் சக்தி விநாயகர் திருக்கோவில் 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு சக்தி விநாயகர் திருக்கோவிலில் அதிகாலை விநாயகருக்கு மகா கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் என சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உள்ள விநாயகர் கோவில் இருந்து தொடங்கி ஊர்வலத்தின் போது.. சிறுவர் சிறுமியர்கள் விநாயகர் முருகன், போன்று வேடம் அனிந்தும் பக்தர்கள் பால் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்தும், பெண்கள், குழந்தைகள் கைகளில் மாவிளக்கு எடுத்தும் மேள தாளம் இசை முழங்க வான வேடிக்கையுடன் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் புதுக்கிராமத்தில் நிறைவடைந்து.
இதனைத் தொடர்ந்து சக்தி விநாயகர் மூலவருக்கும் உற்சவருக்கும் 21 வகையான சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாரானையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 1000 க்கும் மேற்பட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
No comments