Breaking News

மயூரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள 22 விநாயகர் ஆலயங்களில் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயிலாடுதுறை பெரிய கோயில் எனப்படும் மயூரநாதர் ஆலயத்தில் தனித்தனி சன்னதிகளில் அமைந்துள்ள 22 விநாயகர் ஆலயங்களில் பிள்ளையாருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பெரிய கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், மகா கணபதி, சித்தி கணபதி, வல்லப கணபதி, குளத்தடி கணபதி, கணக்கு பிள்ளையார் என்று தனித்தனி சந்ததிகளில் 22 விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 சன்னதிகளிலும் அமைந்துள்ள பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


தொடர்ந்து ஆலயத்தில் பெரிய பிள்ளையான மகா கணபதிக்கு திரவிய பொருட்களால் மகா அபிஷேகமும் மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!