சீர்காழி அருகே மயான சாலை மற்றும் பாலம் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் நேற்று விபத்தில் உயிரிழந்த நிலையில் இன்று அவரின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மயானத்திற்கு செல்லும் சாலை போதிய வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களின் வழியே அவரின் உடலை எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயான செல்லும் சாலை அமைத்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறும் கிராம மக்கள் இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை வயல் வழியே வாய்க்காலில் இறங்கி பாதுகாப்பு இல்லாத நிலையில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர் அப்பொழுது அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி ஏறும் போது வழுக்கி விழுந்து நிலை ஏற்பட்டது.
இதேபோல் இறந்தவரின் உடல்களை நல்லடக்கம் செய்ய பல சிரமப்பட்டு உடல்களை அடக்கம் செய்வதாகவும், வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும் போது இந்த நிலையில் என்றால் மழைக்காலங்களில் இந்த நிலை மிகவும் மோசமாகும் எனவே அரசு மணிக்கரணை கூழ வாய்க்காலில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments