விசிகவின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து மாவட்ட செயற்குழு கூட்டம்.
விசிகவின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து மாவட்ட செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய தனி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் பங்கேற்று "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு" வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ளது மாநாடு சிறப்பிக்க வேண்டும் அதேபோன்று கிராமங்கள் தோறும் மகளிர்களை ஒன்றிணைத்து மாநாட்டுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் ஒவ்வொரு முகாம் மற்றும் ஒன்றிய, தொகுதி பொறுப்பாளர்கள் மூலமாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட மகளிர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தினார் . இதில் ஏராளமான விடுதலை கட்சினர் கலந்துகொண்டனர்.
No comments