Breaking News

மயிலாடுதுறையில் விவசாயத்தை லாபகரமாக செய்வது குறித்தும், விளை பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்தும், விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம், விவசாயம் என்பது தற்போதைய நிலைமையில் லாபம் இல்லாத ஒரு தொழிலாக பார்க்கப்படும்  நிலையில், ரசாயன கலப்பு இல்லாத வேளாண் பொருட்களுக்கும், வேளாண் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மாவு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவுப் பொருட்களுக்கு தற்போது மார்க்கெட்டிங்கில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனை விவசாயிகள் அறிந்து கொண்டு மதிப்பு கூட்டு பொருளாக விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் நடைபெற்றது. 

யாழ் மரச்செக்கு ஆலை மற்றும் இயற்கை உணவு பொருள் அங்காடியில் நடைபெற்ற பயிற்சியில் வேளாண் துறை இணை இயக்குனர் சேகர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்வது குறித்தும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறித்தும் நேரடி செயல்முறை விளக்கம் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். ஏராளமான விவசாயிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!