Breaking News

புதுவை வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழா.


புதுவை அடுத்த கொங்கப்பட்டு மலட்டாரு அருகில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமய சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுவை அடுத்த தமிழக பகுதியான கொங்கம்பட்டு மலட்டாறு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணி ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ஒன்று முதல் நான்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

காலை 8 மணி அளவில் கலச புறப்பாடு நடைபெற்று சுப்ரமணி ஆலயத்தின் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிகார மூர்த்திகள் மற்றும் 13 அடி உயர விஸ்வரூப முருகன் சிலைக்கு கலச நீர் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் கொங்கும்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 

விழாவில் கடை ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று, இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!