புதுச்சேரியில் மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் மரியாதை நிமித்தமாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார்.
புதுச்சேரிக்கு வருகை புரிந்த மத்திய உள்துறைச் செயலர் கோவிந்த் மோகன், முதலமைச்சர் ரங்கசாமி யை சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சந்தித்தார். அப்போது, இன்று காலை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், மத்திய அரசின் உதவியுடன் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் முதன்மைத் திட்டங்களின் நிலை மற்றும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தான் நடத்திய ஆய்வு குறித்து விளக்கிக் கூறினார்.
பின்னர், முதலமைச்சர் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான திட்டப்பணிகளில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை மத்திய உள்துறைச் செயலரிடம் அளித்து கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அஷுதோஷ் அக்னிகோத்ரி, சார்புச் செயலர் ரவி ரஞ்சன், தலைமைச் செயலர் டாக்டர் சரத் சௌகான், அரசுச் செயலர்கள் டாக்டர் முத்தம்மா,கேசவன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments