விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது அவர்களின் விருப்பம். சிவகங்கையில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
அதன் பின்னர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகளிடம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுவது குறித்து கேட்டறிந்து, சில ஆலோசனைகளை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மதுரையை விட சிவகங்கையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றதாகவும், நிறைவேற்றப்பட்ட அரசு திட்டங்கள் குறித்தும், இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ள நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்ததாகவும், விரைந்து அரசு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியதாகவும், ஆய்வுப் பணிகள் குறித்து முழு அறிக்கையும் முதல்வரிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களது விருப்பம் அதனை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
No comments