Breaking News

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட இரு இளம் பெண்களின் வீடியோ; சமூக வலைதளங்களில் வைரல்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட இரு இளம் பெண்களின் வீடியோ; சமூக வலைதளங்களில் வைரல். மயிலாடுதுறை போலீசார் விசாரணை மயிலாடுதுறை பேருந்து நிலையங்களில் பெண் காவலர்களை காவல் பணியில் ஈடுபடுத்த கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து மயிலாடுதுறையில் உள்ள நர்சிங் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு நர்சிங் பயின்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பிரிண்டிங் ப்ரஸில் பணியாற்றும் இளம் பெண் தான் காதலிக்கும் இளைஞர் தன்னிடம் பேசாததற்கு கல்லூரி மாணவிதான் காரணம் என்று கூறி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். 

இதில், பிரிண்டிங் ப்ரஸில் பணியாற்றும் இளம்பெண் நர்சிங் மாணவியை பாய்ந்து சென்று தாக்கும் காட்சியும், அதன் பின்னர் இருவரும் முடியை பிடித்து தாக்கி கொண்டபோது பொதுமக்கள் விலக்கிவிடும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

நர்சிங் மாணவி உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறையில் இரண்டு பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பணி அதிக படுத்த வேண்டும் எனவும் கூடுதல் பெண் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு பெண் காவலர்கள் அவசியம் தேவை எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments

Copying is disabled on this page!