புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த இருவரை கைது செய்த பொலிசார்.
புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த இருவரை கைது செய்த பொலிசார், அவர்களிடமிருந்து ரூ.1.30 லட்சம் மதிப்பிலான போதை வஸ்த்துக்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியில் சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்குள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த தீக்ஷித் (32) என்பவர் சிறுவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொண்டமாநத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பாபு(37) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி.
No comments