சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்தில் சாலை வசதி வேண்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே செம்மங்குடி கிராமத்திற்க்கு அரசால் வழங்கப்பட்டு 24 ஆண்டுகளாக சாலை இல்லாமல் இருக்கும் குடியிருப்புகளுக்கு உடனடியாக சாலை அமைத்து தரக் கோரியும், வடிகால் இல்லாமல் மழைக்காலங்களில் மழை நீரால் நிரம்பி வழிந்து நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க வடிகால் அமைத்து தர வேண்டியும், செம்மங்குடி வாண்டியான்களம் முதல் குளத்தூர் ரோட்டிற்கு மின்விளக்கு அமைத்து தர வேண்டியும், செம்மங்குடி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்தர் மற்றும் சீர்காழி வட்டாட்சியர் உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததின் பேரில் தற்காலிகமாக கலைந்து செல்கின்றனர். செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் சித்தாரத் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் உலக கனிவண்ணன், செம்மங்குடி கிளை பொருளாளர் ராஜ்குமார், திருநகரி ஜனாவளவன்,நாங்கூர் கிளைச் செயலாளர் பிரவீன் குமார், குளத்தூர் கிளைச் செயலாளர் கணேசன் மூர்த்தி, புளிச்சக்காடு சந்திரன், உத்திராடம், விடுதலை மூர்த்தி, ராஜா ராமன், நாங்கூர் ரஞ்சித் குமார்,விசிக மகேஷ், விடுதலைமாறன், சேலம் ராமன், தில்லை விலங்கு கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments