உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கத்தின் முப்பெரும் விழா மற்றும் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கத்தின் முப்பெரும் விழா மற்றும் கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில் உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக 4 வது முறையாக எஸ்.டி. எம். முகம்மதுகனி தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அனைத்து நிர்வாகிகளும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்கள் இந்நிகழ்ச்சியில் சதக்கத்துல்லா,சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்து பேசியபோது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வியாபாரிகள் சங்க பேரவை மாநில செயலாளர் ஏழுமலை அவர்கள் சங்க செயல்பாடுகளை வாசித்தார் மற்றும் மேலும் நிகழ்ச்சியில் இளங்கோவன் தமிழ்மணி, ரியாக்முகமது, கார்த்திக் ராஜா, நல்லதம்பி, நூர்தின் பக்ருதீன் அமிர்தகண்டேடிசன், சங்கர், மதியழகன், மணிகண்டன், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments