காரைக்காலில் இருசக்கர வாகனங்களை திருடிய சீர்காழி சேர்ந்த வளையல் வியாபாரி கைது. திருடப்பட்ட வாகனங்களை வாங்கிய நபர்கள் மீதும் வழக்கு பதிவு.
காரைக்கால் மாவட்டம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கு புறவழிச் சாலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த activa வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது வாகனத்தை ஓட்டி வந்தது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பதும் வாகனத்தின் ஆவணங்களை கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து அந்த வாகனத்தை அவர் திருடி வந்ததையும், போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நம்பர் பிளேட்டை கழட்டியதையும் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தும் போது அவர் இதுபோல காரைக்கால் மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடியதும் அந்த இருசக்கர வாகனங்களை சீர்காழி பகுதியை சுற்றியுள்ள முகமது சாலி, குபேந்திரன், வித்யாசாகர், அபினேஷ் ஆகியோரிடம் ஆர்சி புக்கை பிறகு தருவதாக கூறி குறைந்த விலைக்கு விற்றுள்ளதும் தெரியவந்தது.
இருசக்கர வாகனங்களை திருடிய முகமது ரியாஸ் - ஐ காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருடப்பட்ட வாகனங்களை வாங்கிய நான்கு பேர் மீது நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நான்கு நபர்களையும் தேடி வருகின்றனர்.
No comments