Breaking News

ஆவடி அருகே மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்க்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர் அன்னை இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரினை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்  மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்
மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக மழை நீரை அகற்றும் பணியினை மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் சூழ்ந்துள்ளது அதன் அடிப்படையில் ஆவடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள பல்வேறு பகுதிகளில் ஆவடி மாநகராட்சி ஆணையர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மழை நீர் அகற்றபட்டது சேக்காடு தரைப்பாலத்தில் சூழ்ந்துள்ள மழை நீரினை அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் இது போன்ற மழை நீரினால் பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும். 
ஆவடி மாநகராட்சி மற்றும் நீர்வளத் துறை இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு அந்தப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது வரும் கனமழை காலத்திற்குள் அப்பணிகள் முடிவுறும். மேலும் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் பல பகுதிகளில் முடிவடைந்துள்ளன. சில பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பாதாள சாக்கடை பணிகள் அனைத்து முடிவடைந்தவுடன் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று மறுசுழற்சி பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், எவ்வளவு கனமழை பெய்தாலும் மழைநீர் பாதிக்காதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும் என இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில்  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆய்வின் போது  ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, பொறியாளர்  ரவிச்சந்திரன், ஆவடி வட்டாட்சியர் சசிகலா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!